ஹைதராபாத் எஸ்.ஆர். நகரில் வசித்து வரும் லத்தீப், இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்முக்கு ரூ. 200 பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தனது ஏடிஎம் அட்டையை இயந்திரத்தில் செருகிய பின்னர், ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த ஏடிஎம் இயந்திர பாகங்கள் திறந்து கொண்டு அதிலிருந்த ரூ. 26 லட்சம் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக்ண்டு அதிர்ச்சி அடைந்த லத்தீப், உடனடியாக ஏடிஎம்மில் இருந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன் பிறகு தனது நண்பனை காவலுக்கு வைத்து விட்டு அருகிலிருந்த எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித் துள்ளார் லத்தீப். விரைந்து வந்த வங்கி அதிகாரிகள், இயந்திரத்தை சரி செய்தனர்.

இந்த ஏடிஎம் மையத்தில் கண்காணிப்பு கேமராவோ பாது காவலரோ இல்லை என்பதால், வங்கி அதிகாரிகளின் அலட்சி யத்தை போலீஸார் கண்டித்தனர். அதேநேரம் மாணவர் லத்தீப்பின் நேர்மையையும், அவர் எடுத்த முயற்சிகளையும் போலீஸார் வெகுவாக பாராட்டினர்.